Thursday, April 28, 2011

பெண்கள் நாட்டின் விண்மீன்கள்

     
‘மங்கயராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா’ என்று பெண்களைப் பெருமைப்படுத்திக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இயம்பியுள்ளார் ‘பெண் பிறப்பே பெருமைமிக்க பிறப்பாகும்’. இன்று சகல துறைகளிலும் பெண்களே விண்மீன்களாத் திகழ்கின்றார்கள். உலகளாவிய நாடுகளிலும் பெண்களின் சேவையானது அளப்பரியதாகக் காணப்படுகின்றது.
பெண்களிடம் அன்பு, கருணை, பொறுமை,தூய்மைக்குரிய பண்புகள் குடிகொள்கின்றன. இதன் மூலம் பெண்னானவள் சாத்வீக குணமுடையவளாகத் திகழ்கிறாள். ஒரு தாயானவள் குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கின்றாள். சாத்வீக குணமுடைய பெண்களே சகல துறைகளிலும்  மிளிர்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
‘தற்காத்து தற்கொண்டாற் போல பேணித்தகை சான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண்’ என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கிற்கிணங்க ஒரு பெண்ணானவள் தன்னையும் காத்துக் தன்னை மணந்துகொண்டவனையும் காத்து மனன அறங்களிலே தளர்சியற்றவளாகக் காணப்படுகின்றாள். இவ்வான பெண்களே கற்புக்கரசிகளாகவும் திகழ்கின்றார்கள்.
சீதை, கண்ணகி, சாவித்திரி போன்றோர் சங்க காலத்தில் கற்புக்கரசிகளாகத் திகழ்ந்தவர்கள். சீதையானவள் இராவணது கைவசம் இருக்கும் போது கற்பு தவறாது நடக்கிறாள். குண்ணகி வெஞ்சினம் கொண்டு மதுரை மாநகரையே தீக்கிரையாக்கினாள். சுhவித்திரி தனது கணவன் உயிரை காலன் கவர்ந்து சென்ற போது காலனுடன் வாதிட்டு உயிரை மீட்டவள் ஆவாள். திருவள்ளுவனுடைய மனைவி வாசுகியும் கற்புக்கரசியாக விளங்கியவள். அன்று கற்புக்கரசிகள் வாழ்ந்ததினாளேயே நாடானது செழிப்புற்று வளர்சியடைந்தது.
விரத்தாயின் வரலாற்றைப் புறனானூறு எனும் நூலிலே பெரிதும் கானலாம். போரிலே கணவன் தனது இறந்தபோதும் சிறியவனான ஒரே மகனைக் கூட இன்முகத்துடன் வீரத்தாயானவள் போருக்கு அனுப்புகின்றாள். அங்கே புறமுதுகு காட்டி ஓடகூடாது எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர்புரியவேண்டும் எனகூறி வழியனுப்புகிறாள். ஆவ்வேளையில் மகனும் கணவனும் நெஞ்சிலே காயப்பட்டு இறக்கும் போது வீர இறும்பூது எய்துகிறாள்.
தமிழர் வாழ்வினிலே சங்க காலத்தில் பெண்கள் கமவுரிமையுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கு சங்க காலத்தில் வாழ்ந்த பெண்புலவர்கள் சான்றுபகர்வர். குhக்கை பாடினியார், ஆண்டாள், ஒளவையார் போன்றோரே சங்க காலத்து பெண்கள் ஆவார். நீதி நெறிகளை வாழவைத்த பின் சைவ உலகிற்குப் புத்துயிர் கொடுத்தவர் மங்கயகரசியார். ஐவணவ சமயத்திற்கு வாழ்வு அளித்தவர் ஆண்டாள் அம்மையார். இவ்வாறு சங்ககாலம் தொடக்கம் பெண்கள் விண்மீன்களாக மிளிர்;கின்றனர்.
பாரதி கவிதைவடிவில் பெண்ணை வடித்துப்புதுமைப்பெண்ணாக கற்பனன கண்டார். 21ம் நூற்றாண்டின் நோக்குவோம் இடத்து பாரதி கண்ட கனவானது இன்றைய காலகட்டத்தில் நனவாகிவிட்டது. பாரதி கண்ட புதுமைப்பெண்கள் பலர் உருவாகி விட்டனர். சிலர் உருவாகிகொண்டு இருக்கறார்கள் என்றால் ஜயமில்லை. ஆணுக்கு பெண் தாழ்ந்தவள் என்ற நிலை சமூதாயத்தில பரவலாக முன்னனய காலத்தில் காணப்பட்டது. ஆணுக்கு பெண் சரி நிகராக இடைக்காலத்தில் திகழ்ந்தாள்.ஆனால் இன்றைய காலகட்டத்தில்பெண்ணே சிறந்து மிளிர்கிறாள் இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று கூறலாம்.  மண்ணில் இருந்து பெண்ணானவள் விண்ணுக்கள் பிரவேசித்துவிட்டாள். இவ்வாறு சகல வழிகளிலும் முன்னேறும் பெண்கள் எதிர்காலவாழ்விற்கு பாரம்பரியத்தை வளமாக நடத்திச்செல்ல வல்லவர்கள்.
அண்களின் தொழில் போர்புரிதல் பெண்களின் தொழில் மகப்பேறு என்று இத்தாலியைச்சேர்ந்த முசாலினி கூறினார். அந்நிலையினன சுவடுபொடியாக்கி பெண்கள் நாட்டை காக்க ஆயுதம் ஏற்கமுடியும் என்று நிரூப்பத்துள்ளனர். களம் கண்டு போர்தொடுத்து வெற்றியினன தனதாக்கி வீரத்தாயின் விளைநிலங்களாய் திகழ்கின்றனர். சகலதுறைகளிலும் பிரவெசிக்கும் இன்றைய பெண்கள் நாட்டின் வின்மீன்களாக திகழ்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls