‘மங்கயராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா’ என்று பெண்களைப் பெருமைப்படுத்திக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இயம்பியுள்ளார் ‘பெண் பிறப்பே பெருமைமிக்க பிறப்பாகும்’. இன்று சகல துறைகளிலும் பெண்களே விண்மீன்களாத் திகழ்கின்றார்கள். உலகளாவிய நாடுகளிலும் பெண்களின் சேவையானது அளப்பரியதாகக் காணப்படுகின்றது.
பெண்களிடம் அன்பு, கருணை, பொறுமை,தூய்மைக்குரிய பண்புகள் குடிகொள்கின்றன. இதன் மூலம் பெண்னானவள் சாத்வீக குணமுடையவளாகத் திகழ்கிறாள். ஒரு தாயானவள் குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கின்றாள். சாத்வீக குணமுடைய பெண்களே சகல துறைகளிலும் மிளிர்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது.
‘தற்காத்து தற்கொண்டாற் போல பேணித்தகை சான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண்’ என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கிற்கிணங்க ஒரு பெண்ணானவள் தன்னையும் காத்துக் தன்னை மணந்துகொண்டவனையும்...